2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

சாதனைப் பட்டியலில் அதிரடி நாயகன் அபிஷேக் சர்மா.

விளையாட்டுSeptember 22, 2025 · 11 months முன்2
சாதனைப் பட்டியலில் அதிரடி நாயகன் அபிஷேக் சர்மா.

ஆசிய கிண்ண தொடர் விறுவிறுப்பாக நடைப்பெற்றுவரும் நிலையில், நேற்றைய சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அபிஷேக் சர்மா 74 ஓட்டங்களை அதிரடியாக பெற்றார். இதில் மொத்தம் 5 சிக்சர்கள் விளாசிய அபிஷேக் சர்மா 2 சிக்சர்கள் அடித்திருந்தபோது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 50 சிக்சர்கள் மைல்கல்லை எட்டினார். இந்த 50 சிக்சர்களை வெறும் 331 பந்துகளில் அடித்துள்ளார்.

இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 50 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார்.

– அந்த பட்டியல்,

1. அபிஷேக் சர்மா – 331 பந்துகள்

2. எவின் லூவிஸ் – 366 பந்துகள்

3. ஆந்த்ரே ரசல் – 409 பந்துகள்

4. ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாயி – 492 பந்துகள்

5. சூர்யகுமார் யாதவ் – 510 பந்துகள்