பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் “டுபாய் பெத்தும்” கைது.

கம்பஹா மற்றும் வரகாபொல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தனித்தனி போதைப்பொருள் சோதனைகளில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக கணேமுல்லை திப்போட்டுகொடவில், “டுபாய் பெத்தும்” என அழைக்கப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர், ரூ.3 லட்சம் மதிப்புள்ள ‘ஐஸ்’ உடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, வரகாபொல பல்லேபுரான் பகுதியில், மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனையில் 12 கிராம் ஐஸ், 4 கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட நபர்கள் இன்று வரகாபொல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.