2026 September 30, Wednesday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.மத்திய மாகாண லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்.நிதி மோசடி மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கிரிஷ் வழக்கு விசாரணை.இலங்கை சார்பில் தேசிய உரையாற்றவுள்ளார் வெளிவிவகார அமைச்சர்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.

உள்ளூர்September 29, 2026 · 9 hours முன்3
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா, தலா 50 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே கொழும்பு நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் பேருந்துகளுக்கான வீதிப் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை வழங்கிய சம்பவம் தொடர்பாக கடந்த 17 ஆம் திகதி இவர் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.

1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் விதிகள் மற்றும் 2014.09.19 ஆம் திகதியமைந்த அமைச்சரவைத் தீர்மானத்தின் பரிந்துரைகளுக்கு மாறாக, தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான 56 பயணிகள் சேவை அனுமதிப்பத்திரங்களை சட்டபூர்வ நடைமுறைகளுக்குப் புறம்பாகவும், வருடாந்தக் கட்டணங்களை ஒரே தடவையில் அறவிடாமலும் வழங்கியதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை இன்று (29) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.