2026 September 30, Wednesday ⛅ கொழும்பு 30° 🌧️ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 32°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !

உள்ளூர்September 30, 2026 · 4 hours முன்2
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !

எயார்பஸ் வானூர்தி கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் வழக்கு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

இது தொடர்பான முதற்கட்ட தகவல் அறிக்கையை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்றைய நீதிமன்ற அமர்வின்போது சமர்ப்பித்தது.

இதேவேளை சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ பரிவர்த்தனை தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், நான்காவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம நேற்று (29) உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.