2026 September 20, Sunday 🌧️ கொழும்பு 27° 🌧️ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 23° ⛈️ மட்டக்களப்பு 32°
LIVE
சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு!இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது இங்கிலாந்துமழையுடன் மண்சரிவு அபாயமும் – மக்கள் விழிப்புடன் இருங்கள்!பல பகுதிகளில் கனமழை – சில இடங்களில் 100 மி.மீ.க்கும் அதிகம்!மோட்டார் வாகனப் பதிவு பிரச்சினைகளுக்கு புதிய WhatsApp இலக்கம்!வெளிநாட்டில் உள்ள பெசில் ராஜபக்ஷவை கண்டறிய சர்வதேச நடவடிக்கை!பிள்ளைகளின் கல்வி, ஒழுக்கம் குறித்து சந்திரிகா உருக்கமான பதிவு!ஸ்மார்ட் பலகைகளுக்காக பெற்றோரிடம் பணம் வசூலிக்க வேண்டாம் – பிரதமர் அறிவுறுத்தல்!

இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது இங்கிலாந்து

விளையாட்டுSeptember 20, 2026 · 1 hour முன்5
இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என இங்கிலாந்து அணி இன்று (19) முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.

இதன்படி, மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்ட்டில் (Old Trafford) இன்று (19) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க 24 பந்துகளில் 36 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 28 பந்துகளில் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்தின் சொனி பேக்கர் (Sonny Baker), ஜோஃப்ரா ஆர்ச்சர் (Jofra Archer) மற்றும் வில் ஜாக்ஸ் (Will Jacks) ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

125 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி 9.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 126 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதி செய்தது.

அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஜோஸ் பட்லர் (Jos Buttler) 32 பந்துகளில் 7 நான்கு ஓட்டங்களையும் 2 ஆறு ஓட்டங்களையும் பெற்று மொத்தமாக 62 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

தலைவர் ஹரி புரூக் (Harry Brook) 33 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

இதன்படி, 62 பந்துகள் (10.2 ஓவர்கள்) மீதமிருந்த நிலையில் பெற்ற இந்த வெற்றியுடன், இங்கிலாந்து அணி தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.