2026 September 29, Tuesday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 32°
LIVE
கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.மத்திய மாகாண லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்.நிதி மோசடி மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கிரிஷ் வழக்கு விசாரணை.இலங்கை சார்பில் தேசிய உரையாற்றவுள்ளார் வெளிவிவகார அமைச்சர்.யோஷித ராஜபக்ஷ தொடர்பான நிதித்தூய்தாக்கல் வழக்கு நவம்பர் 3க்கு ஒத்திவைப்பு.

கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.

உள்ளூர்September 29, 2026 · 1 minute முன்0
கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.

எயார்பஸ் (Airbus)கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை  எதிர்வரும் அக்டோபர் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (29) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காகவும், எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்காகவுமே அவர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

குறிப்பிட்ட ‘கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் தொடர்பாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.