2026 September 17, Thursday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
குடியேற்ற அழுத்தம் அதிகரிப்பு – மாணவர் விசாவில் கடுமை!IPL ஏலம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது!பயணிகள் அசௌகரியம் – கோரிக்கைகளில் உடனடி கவனம் கோரிக்கை!காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரிக்கு பலத்த மழை சாத்தியம்!2 மில்லியன் டொலர் விசாரணையில் நாமல் மீது நீதிமன்ற உத்தரவு!தமிழரசுக் கட்சி முடிவுக்கு எதிராக அரியநேந்திரன் தரப்பு சட்டப் போராட்டம்!மழை தொடர்ந்தால் நிலச்சரிவு அபாயம் மேலும் அதிகரிக்கும்!சட்டவிரோத வாகன வைத்திருப்பு குற்றச்சாட்டு – வழக்கு நீதிமன்றத்தில்!

IPL ஏலம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது!

விளையாட்டுSeptember 17, 2026 · 2 hours முன்3
IPL ஏலம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது!

2027-ம் ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் இந்தியாவிலேயே நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது. 

கடந்த 3 ஆண்டுகளாக வெளிநாடுகளில் நடைபெற்ற ஐபிஎல் ஏலம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது. 

2023-ம் ஆண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலம் கொச்சியில் நடைபெற்றது. அதன்பிறகு தொடர்ந்து 3 ஆண்டுகள் வெளிநாடுகளில் ஏலம் நடத்தப்பட்டது. 

2024-ம் ஆண்டு டுபாயிலும், 2025-ம் ஆண்டு மெகா ஏலம் ஜெட்டாவிலும், 2026-ம் ஆண்டு ஏலம் அபுதாபியிலும் நடைபெற்றது. 

தற்போது 2027-ம் ஆண்டு ஏலத்தை மீண்டும் இந்தியாவில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 

ஐபிஎல் 2027 ஏலம் மினி ஏலமாக நடைபெற உள்ளது. இதனால் மெகா ஏலத்தைப் போன்று அணிகளில் மிகப்பெரிய அளவில் வீரர்கள் மாற்றம் இருக்காது. 

பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, அணிகளின் நிர்வாகத்துக்கும் வெளிநாட்டு பயணச் சுமையை குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.