2026 September 17, Thursday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
IPL ஏலம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது!பயணிகள் அசௌகரியம் – கோரிக்கைகளில் உடனடி கவனம் கோரிக்கை!காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரிக்கு பலத்த மழை சாத்தியம்!2 மில்லியன் டொலர் விசாரணையில் நாமல் மீது நீதிமன்ற உத்தரவு!தமிழரசுக் கட்சி முடிவுக்கு எதிராக அரியநேந்திரன் தரப்பு சட்டப் போராட்டம்!மழை தொடர்ந்தால் நிலச்சரிவு அபாயம் மேலும் அதிகரிக்கும்!சட்டவிரோத வாகன வைத்திருப்பு குற்றச்சாட்டு – வழக்கு நீதிமன்றத்தில்!சிங்கப்பூர் பயணத்திற்கு முன் FCID கடிதம் கையளிப்பு – குடும்பம் கூறும் பதில்!

பயணிகள் அசௌகரியம் – கோரிக்கைகளில் உடனடி கவனம் கோரிக்கை!

உள்ளூர்September 17, 2026 · 2 hours முன்4
பயணிகள் அசௌகரியம் – கோரிக்கைகளில் உடனடி கவனம் கோரிக்கை!

ரயில் தொழிற்சங்க ஊழியர்களால் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அனைத்து அலுவலகப் புகையிரதங்களும் தற்போது வழமைபோன்று சேவையில் ஈடுபட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன் ஊடகப் பேச்சாளரும், புகையிரதப் போக்குவரத்து அத்தியட்சகருமான அசங்க சமரசிங்க தெரிவிக்கையில், ஒரு புகையிரதத்தைத் தவிர ஏனைய அனைத்துப் புகையிரதங்களையும் வழமைபோன்று சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

தற்போதைய புகையிரத பொது முகாமையாளரை பதவியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத தொழிற்சங்கங்கள் தற்போது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. 

நேற்று (16) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 48 மணிநேரத்திற்கு இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்த தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் புகையிரத தொழிற்சங்க நடவடிக்கை குறித்து கருத்து வெளியிட்ட புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன, நேற்றை தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரே பல ரயில் சேவைகள் முடங்கியதாக தெரிவித்தார். 

இதனால் பல பணியாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியதாகவும் அவர் கூறினார். 

எனவே தமது கோரிக்கைகள் குறித்து உடன் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தினார்.