2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அபிஷேக் சர்மாவின் அதிரடி – பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி.

விளையாட்டுSeptember 22, 2025 · 11 months முன்2
அபிஷேக் சர்மாவின் அதிரடி – பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி.

ஆசிய கிண்ணம் – சூப்பர் 4 சுற்றில் நேற்று இடம்பெற்ற இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்தியா அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

டுபாயில் சர்வதேச மைதானத்தில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பினை தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை பெற்றது.

> துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில்,

– Sahibzada Farhan அதிகபட்சமாக 58 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

> பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Shivam Dube அதிகபட்சமாக 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

172 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18.5 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

> துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில்,

– ஆரம்ப துப்பாட்டை வீரர் Abhishek Sharma அதிரடியாக துப்பெடுத்தாடி 74 ஓட்டங்களையும்,

– Shubman Gill 47 ஓட்டங்களையும்

– Tilak Varma ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

> பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Haris Rauf 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

மேலும், சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தாங்கள் விளையாடிய முதல் போட்டியிலே வெற்றி பெற்று முன்னிலை வகிக்கின்றது.