ட்ரம்ப் – மஸ்க் மீண்டும் ஒன்றிணைவு.

அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக கடந்த சில காலங்களாக ட்ரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது.
இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் சந்தித்துள்ளனர்.
சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ட்ரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் சந்தித்து இருவரும் உரையாடியுள்ளனர்.




