2026 October 12, Monday ⛅ கொழும்பு 23° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

விளக்கமறியலில் இருந்த ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் இன்று மீண்டும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலை!

உள்ளூர்July 3, 2026 · 3 months முன்6
விளக்கமறியலில் இருந்த ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் இன்று மீண்டும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலை!

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவர் இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகளுக்காகவே இவர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த அவர்கள், இன்று வரையான காலப்பகுதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று மீண்டும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.