2026 October 10, Saturday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

அமெரிக்க போர்க்கப்பலில் உணவுப் பற்றாக்குறை – ஆயிரக்கணக்கான வீரர்கள் அவதி?

உலகம்August 14, 2026 · 2 months முன்9
அமெரிக்க போர்க்கப்பலில் உணவுப் பற்றாக்குறை – ஆயிரக்கணக்கான வீரர்கள் அவதி?

மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்கள் உணவுப் பற்றாக்குறை, பழுதுடைந்த குழாய் வசதிகள் மற்றும் கடுமையான சோர்வு ஆகியவற்றால் அவதிப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் உள்ள சில மாலுமிகள் கப்பலில் இருந்து கடலில் குதித்துத் தற்கொலைக்கு முயன்றதாகவும், கப்பலில் உள்ளவர்களின் மனநலம் குறித்து அவர்களது குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளதாகவும் இராணுவ செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

இருப்பினும், பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்சேத் நேற்று (14) கூறுகையில், கப்பலின் நிலைமை குறித்த செய்திகள் முழுமையாகத் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

250 நாட்களுக்கும் மேலாக பயணிக்கும் இந்த விமானம் தாங்கிப் போர்க்கப்பல் கடந்த நவம்பர் மாதம் கலிபோர்னியாவிலிருந்து தென் சீனக் கடலுக்குப் புறப்பட்டது. 

பின்னர் பெப்ரவரியில் ஈரான் மீதான தாக்குதல்களுக்கு முன்னதாக இது மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பப்பட்டது. 

ஆரம்பத்தில் மே மாதத்துடன் முடிவடைய வேண்டிய இவர்களின் சேவைக்காலம், பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நீண்ட காலம் பணிக்கமர்த்தல் மற்றும் ஏனைய விடயங்களால் அதன் பணியாளர்கள் பாரிய மன அழுத்தத்தை எதிர்நோக்கியுள்ளனர். 

எனினும் திரும்பும் திகதி எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், முன் திட்டமிடப்பட்ட சுழற்சி முறையின்படி, இக்கப்பலுக்குப் பதிலாக ‘யுஎஸ்எஸ் ஜோர்ஜ் வொஷிங்டன் கப்பலை அனுப்ப அமெரிக்கா ஆயத்தமாகி வருவதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.