2026 October 11, Sunday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நாளை 12 மணித்தியால அவசர நீர் வெட்டு!

உள்ளூர்July 3, 2026 · 3 months முன்3
நாளை 12 மணித்தியால அவசர நீர் வெட்டு!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நாளை பன்னிரண்டு மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இந்த நீர்விநியோகத் தடையானது நாளை சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையான பன்னிரண்டு மணித்தியால காலப்பகுதியில் அமுலாகும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

மின்சார விநியோகக் கட்டமைப்பின் முல்லேரியா உப மின்நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள், தெஹிவளை நீர் உந்து நிலையம் மற்றும் மாளிகாவத்தை லைட்ஹவுஸ் நீர் உந்து நிலையம் ஆகியவற்றின் மேம்பாட்டுப் பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, கொழும்பு 01 முதல் 15 வரையான அனைத்துப் பகுதிகளிலும் இந்த நீர் விநியோகத் தடை அமுலாகவுள்ளது. அத்துடன் ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே, பத்தரமுல்ல, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ, ஐடிஎச், கொட்டிகாவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தலை ஆகிய இடங்களிலும் நீர் விநியோகம் முழுமையாகத் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.