2026 October 11, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 23° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!

BREAKINGஉள்ளூர்August 3, 2026 · 2 months முன்7
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!

மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை ஏற்படுவது குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

​இந்த அறிவித்தல் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி வரை செல்லுபடியாகும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

​ மகாவலி கங்கையின் மேல் நீரேந்துப் பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பெய்த மழைவீழ்ச்சி, மேலும் மழை பெய்யக்கூடும் என்ற முன்னறிவிப்பு மற்றும் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்படக்கூடிய அபாயம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு, மகாவலி கங்கை வடிநிலத்தின் உடுநுவர, உடபலாத, யடிநுவர, தொலுவ, கொத்மலை, பஸ்பாகே, கங்க இஹல கோரள, பஸ்பாகே கோரள, கங்கவட்ட கோரள, ஹாரிஸ்பத்துவ மற்றும் பாததும்புர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கே இந்தப் பெருவெள்ள அபாய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

​அத்துடன், அப்பகுதிகளில் மகாவலி கங்கைக்கு அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ள நிலைமையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.