2026 October 10, Saturday 🌧️ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 29°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பரீட்சார்த்திகள் அச்சப்பட வேண்டாம் – பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு!

உள்ளூர்August 14, 2026 · 2 months முன்9
பரீட்சார்த்திகள் அச்சப்பட வேண்டாம் – பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நாளை (14) இடம்பெறவுள்ள பாடத்திற்கான வினாத்தாள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கசியவில்லை என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. 

எனவே பரீட்சார்த்திகள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் வழமை போல் அந்தப் பரீட்சை இடம்பெறும் எனவும் அந்தத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இதனிடையே அம்பாலாந்தோட்டையிலுள்ள உயர்தரப் பரீட்சை மையமொன்றில், பரீட்சை வினாத்தாள் பெட்டியொன்றிலிருந்து நாளை (14) நடைபெறவிருந்த பௌதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 06 பொதிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

எவ்வாறாயினும், அந்த வினாத்தாள்கள் அடங்கிய பொதிகள் திறக்கப்படவோ அல்லது வெளிப்படுத்தப்படவோ இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி முன்னதாக உறுதிப்படுத்தினார். 

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்றது. 

இவ்வாறான பின்னணியில், உயர்தர ஒருங்கிணைப்பு மையமான அம்பாலாந்தோட்டையிலுள்ள பாடசாலையொன்றில், இன்று நடைபெறும் பாடங்களுக்குப் புறம்பாக நாளை நடைபெறவிருந்த பாடத்தின் 6 வினாத்தாள் பொதிகள் பெட்டியொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தன. 

இன்று நடைபெறவிருந்த இசை, நடனம் மற்றும் விவசாய அறிவியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் பொதிகள் அடங்கிய பெட்டியில் இருந்தே, நாளை நடைபெறவிருந்த பௌதிகவியல் முதலாம் விනාத்தாள் அடங்கிய 6 பொதிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எவ்வாறாயினும், அந்த வினாத்தாள்கள் பாதுகாப்பாக முத்திரையிடப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பரீட்சார்த்திகள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ள வேண்டாம் என பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.