2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 34° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனுவை நிராகரித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

உள்ளூர்July 3, 2026 · 3 months முன்4
யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனுவை நிராகரித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலுள்ள “சதி” என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட சீராய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

யோஷித ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட சீராய்வு மனு மீதான தீர்மானம் இன்று அறிவிக்கப்பட்ட போதே, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குறித்த மனு மீதான விசாரணை நீதியரசர்களான அமல் ரணராஜா மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோரைக் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.