2026 October 10, Saturday ⛅ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!

BREAKINGஉள்ளூர்August 13, 2026 · 2 months முன்9
வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோடு 17,592 ரூபாவாக அதிகரித்துள்ளது. 

இது கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 277 ரூபா உயர்வாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு மாதத்திற்குத் தேவைப்படும் குறைந்தபட்சத் தொகையே உத்தியோகபூர்வ வறுமைக்கோடு மூலம் அறிவிக்கப்படுகிறது. 

ஜூன் மாத உத்தியோகபூர்வ வறுமைக்கோட்டின்படி, கொழும்பு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் மதிப்பு 18,973 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், கம்பஹா மாவட்டத்தில் அம்மதிப்பு 18,876 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. 

வறுமைக்கோட்டின் மிகக் குறைந்த மதிப்பு மொனராகலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்தத் தொகை 16,821 ரூபாவாகும்.