2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!

இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!

விளையாட்டுAugust 17, 2026 · 1 hour முன்5
இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (17) இடம்பெறுகின்றது. 

காலியில் இடம்பெறும் போட்டியின் இரண்டாம் நாளான நேற்று மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 

நேற்றைய (16) இரண்டாம் நாள் ஆட்ட நேர நிறைவில் இந்திய அணி தமது முதலாம் இனிங்ஸில் 9 விக்கெட்டுக்களை இழந்து 460 ஓட்டங்களைப் பெற்றது. 

இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் தேவ்தத் படிக்கல் 167 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார். 

கே.எல் ராஹூல் 82 ஓட்டங்களையும், துருவ் ஜூரெல் 51 ஓட்டங்களையும் அதிபட்சமாக பெற்றுக் கொடுத்தனர். 

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்டுக்களையும், கேசர நுவந்த 3 விக்கெட்டுக்களையும், அசித்த பெர்னாண்டோ ஒரு விக்கெட்டயைும் கைப்பற்றினர். 

இந்நிலையில் இன்றைய தினம் மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பமான நிலையில் இந்திய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 462 ஓட்டங்களை பெற்றதுடன் இந்திய அணியின் முதலாம் இனிங்ஸ் முடிவுக்கு வந்தது. 

அதன்பின்னர் இலங்கை அணி தமது முதலாம் இனிங்ஸை தொடரவுள்ளது.