2026 October 14, Wednesday ⛅ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 25° ⛅ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!

உள்ளூர்August 17, 2026 · 2 months முன்11
14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!

கொழும்பு 09 பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து சிறுவன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்தார். 

இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்த 12 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

குறித்த சிறுவன் 14 மாடிகளைக் கொண்ட அந்த குடியிருப்பின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில், மேலும் சில சிறுவர்களுடன் இணைந்து சுற்றியுள்ள காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த போதே இவ்வாறு கீழே விழுந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இந்தச் சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.