2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

அமைதியே சிறந்த மருந்து

உலகம்January 10, 2026 · 7 months முன்1

உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் உலகளாவிய ராணுவ செலவு குறித்து கடும் கவலை வெளியிட்டுள்ளார். 2024-ம் ஆண்டில் உலகம் முழுவதும் ராணுவத்திற்காக செலவிடப்பட்ட தொகை 2.7 டிரில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய ரூபாயில் ரூ.243 லட்சம் கோடி என அவர் தெரிவித்துள்ளார்.

இது இதுவரை இல்லாத அளவிலான சாதனை செலவாகும் என்றும், அதே நேரத்தில் உலகளாவிய சுகாதாரத் திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதி கணிசமாக குறைந்துள்ளது என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

“இந்த உலகிற்கு தற்போது தேவைப்படுவது போர்களை தீவிரப்படுத்துவது அல்ல; உயிர்களை காப்பதே முக்கியம். அமைதியே சிறந்த மருந்து” என டெட்ரோஸ் அதானம் வலியுறுத்தினார்.

மேலும் அவர் கூறுகையில்,
150 நாடுகளில் செயல்படும் WHO அமைப்பிற்கு, 2 ஆண்டுகளுக்கு மொத்தம் 420 கோடி அமெரிக்க டாலர் மட்டுமே உறுப்புநாடுகள் வழங்குகின்றன. இது மிகப்பெரிய தொகை அல்ல என்றும்,
உலகளவில் வெறும் 8 மணி நேரத்தில் ராணுவ செலவுக்காக செலவிடப்படும் தொகையே இந்த அளவுக்கு சமம் என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இந்த தொகை ஒரு அதிநவீன ஸ்டீல் பாம்பர் விமானத்தின் விலைக்கும், புகையிலை நிறுவனங்கள் ஆண்டுதோறும் விளம்பரத்திற்கு செலவிடும் தொகையின் ஒரு பகுதிக்கும் இணையானது என குறிப்பிட்டு,
“உலகில் எதற்கு மதிப்பு கொடுக்கப்படுகிறது என்பதே மாற்றப்பட்டு விட்டது போல தெரிகிறது” என அவர் வேதனை தெரிவித்தார்.