2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
வாக்குமூலம் அளிக்க ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்த கெஹெலிய!இலங்கையின் பணவீக்கம் 5% இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் – நந்தலால் வீரசிங்க!20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் நாடு திரும்பினார்!மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்

30 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் கடத்தல்

உள்ளூர்January 10, 2026 · 7 months முன்1
30 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் கடத்தல்

காலாவதியான அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி கடத்தி வரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளைச் சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

யாழ். கைதடி A9 வீதிப் பகுதியில் நேற்று காலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், மரக்குற்றிகளை ஏற்றி வந்த ‘ஹன்ரர்’ (Hunter) ரக வாகனத்தை மறித்துச் சோதனை செய்தனர். 

இதன்போது, காலாவதியான அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மரங்கள் கடத்தப்படுவது கண்டறியப்பட்டது. இவ்வாறு கடத்தி வரப்பட்ட மரக்குற்றிகளுள் தேக்கு மற்றும் வேம்பு போன்ற பெறுமதியான மரங்கள் காணப்பட்டன. 

இதனையடுத்து, வாகனத்தையும் மரக்குற்றிகளையும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு வந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகளையும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.