2026 October 9, Friday 🌧️ கொழும்பு 29° 🌧️ யாழ்ப்பாணம் 33° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

குசல் மெண்டிஸ் இல்லை – திக்வெல்லவுக்கு மீண்டும் வாய்ப்பு!

விளையாட்டுAugust 12, 2026 · 2 months முன்9
குசல் மெண்டிஸ் இல்லை – திக்வெல்லவுக்கு மீண்டும் வாய்ப்பு!

சுற்றுலா இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டிக்காகத் தெரிவுசெய்யப்பட்ட இலங்கை குழாம் இன்று (12) அறிவிக்கப்பட்டது. 

காயத்திலிருந்து இன்னும் குணமடையாத காரணத்தினால், விக்கெட் காப்பாளர் குசல் மெண்டிஸ் இந்த குழாமில் பெயரிடப்படவில்லை. 

இதன் காரணமாக தனஞ்சய டி சில்வாவின் தலைமையில் பெயரிடப்பட்டுள்ள இந்த குழாமிற்கு, விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல அழைக்கப்பட்டுள்ளார். 

அவர் 3 வருடங்களின் பின்னரே இவ்வாறு இலங்கை குழாமில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடைபெற்ற போட்டியின் பின்னர் இதுவரை இலங்கை டெஸ்ட் அணிக்காக விளையாடவில்லை. 

அத்துடன், புதிய வீரர்களான துடுப்பாட்ட வீரர் பசிந்து சூரியபண்டார மற்றும் சகலதுறை வீரர் கேஷர நுவன்த ஆகியோரும் குழாமிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆரம்பித்து வைக்கும் வகையில், முதல் போட்டி ஓகஸ்ட் 15 ஆம் திகதி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இலங்கை டெஸ்ட் குழாம்: 

தனஞ்சய டி சில்வா – அணித்தலைவர் 

லஹிரு உதார 

நிஷான் மதுஷ்க 

கமிந்து மெண்டிஸ் – உப அணித்தலைவர் 

தினேஷ் சந்திமால் 

பசிந்து சூரியபண்டார 

சோனால் தினுஷ 

நிரோஷன் திக்வெல்ல – விக்கெட் காப்பாளர் 

ரமேஷ் மெண்டிஸ் 

பிரபாத் ஜயசூரிய 

கேஷர நுவன்த 

மிலான் ரத்நாயக்க 

அசித பெர்னாண்டோ 

லஹிரு குமார 

விஷ்வ பெர்னாண்டோ 

தில்ஷான் மதுஷங்க