2026 October 11, Sunday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

எதிர்கால இலங்கைக்கான புதிய சிந்தனைகள் மெல்போர்னில்

உள்ளூர்May 24, 2026 · 5 months முன்5
எதிர்கால இலங்கைக்கான புதிய சிந்தனைகள் மெல்போர்னில்

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடன் நடத்தப்பட்ட ‘கெக்கும  Sri Lanka – Mingle with Dilith’ என்ற சிறப்பு சந்திப்பு, மெல்போர்னில் உள்ள அகேசியா கெம்பஸ் தியேட்டரில் நடைபெற்றது.

‘சர்வஜன அதிகாரம்’ மற்றும் Melbourne Solidarity ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இச்சந்திப்பில், மெல்போர்னில் வசிக்கும் பெருமளவிலான இலங்கையர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, இச்சந்திப்பில் கலந்துகொண்ட திலித் ஜயவீரவுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தாய்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வாழ்ந்தாலும், நாட்டின் மீது தீராத பற்றுக்கொண்ட மெல்போர்ன் வாழ் இலங்கையர்களுடன் – நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை, எதிர்கால சவால்கள் மற்றும் ஒரு தொழில்முனைவோர் ராஜ்யத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு தாய்நாட்டின் மீதுள்ள அக்கறை, அன்பு மற்றும் எதிர்கால இலங்கையின் வளர்ச்சிக்காக பங்களிக்க அவர்கள் கொண்டுள்ள தயார்நிலை ஆகியன இச்சந்திப்பில் வெளிப்பட்டதுடன், அவர்களின் ஆதரவு எதிர்காலத்திலும் தாய்நாட்டிற்கு பெரும் பலமாக அமையும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.