2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 35° 🌧️ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சமூக ஊடகங்களில் வரும் முதலீட்டு சலுகைகளை நம்பாதீர்கள்

உள்ளூர்May 24, 2026 · 5 months முன்6
சமூக ஊடகங்களில் வரும் முதலீட்டு சலுகைகளை நம்பாதீர்கள்

இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்று வரும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென இலங்கை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெலிகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகள் மற்றும் பல்வேறு இணையத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய மோசடிகளில் ஈடுபடுவோரை கைது செய்யும் நோக்கில், நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவல்துறை மா அதிபரால் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடிகள் தொடர்பான தகவல்களை கணினி குற்ற விசாரணைப் பிரிவியின் 011 2300 756 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் என காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 071 859 2918 மற்றும் 071 859 1765 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் மூலமும் தகவல்களை வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர, குற்றவியல் விசாரணைத் திணைக்களம் அலுவலகத்திற்கு நேரில் சென்று எழுத்துமூல முறைப்பாடுகளையும் சமர்ப்பிக்க முடியும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.