2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 36°
LIVE
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!

சீன நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 80 பேர் உயிரிழப்பு!

உலகம்May 24, 2026 · 3 months முன்2
சீன நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 80 பேர் உயிரிழப்பு!

சீனாவில் உள்ள ஷான்சி மாகாணம் பகுதியில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பாரிய வெடி விபத்தில் சிக்கி 80 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நிகழ்ந்த வேளையில், சுரங்கத்திற்குள் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது திடீரென ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக பாரிய வெடிப்பு ஏற்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த வெடிவிபத்தில் பல தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்ட நிலையில், மீட்புப் படையினர் நீண்ட நேரம் போராடி மீட்புப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 201 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மீட்புப் பணிகளை முழுவீச்சில் முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுவரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் உடலங்களை மீட்கும் பணிகளும், உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.