2026 October 25, Sunday 🌧️ கொழும்பு 26° ⛈️ யாழ்ப்பாணம் 25° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

விமானப்படைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க இரட்டை வெற்றி

விளையாட்டுJanuary 24, 2026 · 9 months முன்4
விமானப்படைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க இரட்டை வெற்றி

83வது தேசிய மல்யுத்த செம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் செம்பியன் பட்டங்களை வென்று இலங்கை விமானப்படை வரலாற்றுச் சிறப்புமிக்க இரட்டை வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 

இப்போட்டித் தொடர் ஜனவரி 21 முதல் 23 வரை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் வெற்றிகரமாக நடைபெற்றது. 

இதில் நாடு முழுவதிலுமிருந்து 10 முன்னணி அணிகள் பங்கேற்றதுடன், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 170 மல்யுத்த வீரர்கள் போட்டியிட்டனர். 

ஆண்கள் பிரிவில் இலங்கை விமானப்படை அணி மொத்தமாக 34.5 புள்ளிகளைப் பெற்று 25 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தேசிய செம்பியன் பட்டத்தை வென்றது. 

அதேவேளை, பெண்கள் அணி தொடர்ச்சியாக 13வது முறையாகவும் செம்பியன் பட்டத்தை வென்று 51 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த செம்பியன்ஷிப்பையும் கைப்பற்றியது. 

பரிசளிப்பு விழா இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவின் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் விமானப்படை விளையாட்டுப் பணிப்பாளர் எயார் கொமடோர் பிரபாத் திஸாநாயக்க, தேசிய மல்யுத்த சங்கத்தின் உப தலைவர் எயார் கொமடோர் எரந்திக்க குணவர்தன உள்ளிட்ட உயர் அதிகாரிகள், அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மற்றும் வீரர்கள் கலந்துகொண்டனர்.