2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்

உள்ளூர்January 24, 2026 · 7 months முன்3
தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்

தெற்கு கடலில் மீட்கப்பட்ட ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் தொகையை, ‘தெஹிபால’ என்பவர் நாட்டுக்கு அனுப்பியுள்ளதாக சந்தேகிப்பதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். 

பொலிஸ் மாஅதிபருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய கடற்படையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், 11 மீனவர்களைக் கைது செய்ய கடற்படையினரால் முடிந்துள்ளது. 

இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 200 கிலோ கிராம் போதைப்பொருட்களுடன் ஒரு நெடுநாள் மீன்பிடிப் படகும் 5 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர். 

குறித்த கடற்பரப்பில் மேலும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பலனாக, போதைப்பொருள் கடத்தப்படுவதாகச் சந்தேகிக்கப்படும் மற்றுமொரு நெடுநாள் மீன்பிடிப் படகையும் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். 

அதிலிருந்த மேலும் ஆறு சந்தேகநபர்களையும் இரண்டு செய்மதித் தொலைபேசிகளையும் கடற்படையினர் கைப்பற்றியதுடன், அதில் சுமார் 70 கிலோ கிராம் போதைப்பொருள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அதற்கமைய சந்தேகநபர்கள் நாளை கரைக்குக் கொண்டுவரப்படவுள்ளதுடன், குறித்த போதைப்பொருள் தொகையில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் உள்ளதாகச் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.