2026 October 15, Thursday 🌧️ கொழும்பு 25° ⛈️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது!

உலகம்June 26, 2026 · 4 months முன்7
ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது!

ஜப்பானின் சிபா மாகாணத்தில் இன்று (26) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கமானது 5.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இது டோக்கியோவிற்கு அருகிலுள்ள பகுதிகளை உலுக்கிய போதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என ஜப்பானிய அதிகாரிகளும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் தெரிவித்துள்ளன. 

ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மதியம் 12:46 மணிக்கு ஏற்பட்டுள்ளது. 

சிபா மாகாணத்தில் சுமார் 50 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவில் இருந்ததாக உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகள் அல்லது குறிப்பிடத்தக்க சேதங்கள் ஏற்பட்டதாக உடனடியாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.