2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

2025 O/L மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

உள்ளூர்June 26, 2026 · 2 months முன்0

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (G.C.E. O/L) பரீட்சை விடைத்தாள்களை மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களைக் ஒன்லைன் (Online) முறைமை ஊடாகத் திணைக்களம் கோரியுள்ளது.

இதற்கமைய, பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் ஜூன் 25 முதல் ஜூலை 8ஆம் திகதி வரை ஒன்லைன் மூலம் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சார்த்திகள் பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://www.doenets.lk இன் “Exam Information Centre” பகுதிக்குச் செல்வதன் மூலமோ அல்லது https://onlineexams.gov.lk/eic என்ற நேரடி இணைய முகவரி மூலமோ விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்கள் 2025 சாதாரண தரப் பரீட்சைக்குப் பயன்படுத்திய பரீட்சை சுட்டெண் (Index number) மற்றும் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், புதியவர்கள் அடையாள அட்டை மற்றும் தொலைபேசி இலக்கத்தைப் பதிவிட்டுப் பதிய வேண்டும்.

ஒரு பாடத்திற்கான மறுபரிசீலனை கட்டணம் 200 ரூபாய் என்பதுடன், இதனை கடன், வரவு அட்டைகள் அல்லது தபால் அலுவலகம் மூலம் செலுத்தலாம்.

ஒரு பரீட்சார்த்தி ஒரு விண்ணப்பத்தை மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் என்பதால், அறிவுறுத்தல்களைக் கவனமாகப் படித்து விண்ணப்பிக்குமாறும், கட்டணம் செலுத்தப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.