2026 November 3, Tuesday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

விளையாட்டுத் துறையை மேம்படுத்த இலங்கைக்கு ஒத்துழைப்பு ஆசிய ரக்பி சம்மேளனம்

விளையாட்டுFebruary 9, 2026 · 9 months முன்5
விளையாட்டுத் துறையை மேம்படுத்த  இலங்கைக்கு  ஒத்துழைப்பு ஆசிய ரக்பி சம்மேளனம்

டுபாய், ஐக்கிய அரபு அமீரகம் – இலங்கையின் ரக்பி விளையாட்டை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது மற்றும் விளையாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஆசிய ரக்பி சம்மேளனத்தின் தலைவர் கைஸ் அல்-தலை மற்றும் இலங்கை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோருக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் டுபாயில் உள்ள அல் பைத் மாளிகையில் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் டுபாயை தளமாகக் கொண்ட முன்னணி விளையாட்டு அமைப்பான Sri Lions International நிறுவனத்தின் தலைவர் கலாநிதி கெலும் சுஜித் பெரேரா உட்பட அதன் சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இலங்கையில் சர்வதேச ரக்பி போட்டிகளை ஏற்பாடு செய்வது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இதன் மூலம் நாட்டின் சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திறன் குறித்து அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார்.