2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!

உலககிண்ணத்தில் இருந்து விலகும் சனத் ஜயசூரிய

விளையாட்டுJanuary 4, 2026 · 7 months முன்0
உலககிண்ணத்தில்  இருந்து விலகும் சனத் ஜயசூரிய

எதிர்வரும் 20-20 உலகக்கிண்ணத் தொடரின் பின்னர், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக சனத் ஜயசூரிய தெரிவித்தார்.

 தனது ஒப்பந்தக் காலம் மேலும் உள்ளபோதிலும், தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் நீடிப்பதற்கு தனக்கு எண்ணம் இல்லை என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். 

 கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவுடனான தொடரின்போது இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டிருந்த போதிலும், அந்த ஆண்டின் இறுதியில் அவர் முழுநேரத் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். 

 சனத் ஜயசூரியவின் பதவிக்காலத்தில், இலங்கை அணி அனைத்து வகையான போட்டிகளிலுமாக  60 போட்டிகளில் விளையாடியுள்ளது. 

 இதில் 29 வெற்றிகளைப் பெற்றுள்ளதுடன், 29 தோல்விகளைச் சந்தித்துள்ளது. இரண்டு போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.