2026 August 15, Saturday ⛈️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

விபத்தில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி

உள்ளூர்January 4, 2026 · 7 months முன்0

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி அற்புதப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைந்திருந்த தொலைத் தொடர்பு கம்பத்தில் மோதிய பின்னர் ஆலயத்தின் மதிலிலும் மோதிய விபத்துச் சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

கல்முனை பக்கமிருந்து மட்டக்களப்பு பக்கம் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையிலேயே இவ்வவிபத்து சம்பவித்துள்ள நிலையில் சாரதி சிறுகாயங்களுக்குள்ளானதுடன் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளார்.

அவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்துச் சம்பவத்தில் விபத்துக்குள்ளான வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.