சூப்பர் 4 தொடக்கத்தில் பங்களாதேஷ் அதிரடி வெற்றி.

ஆசிய கிண்ணத் தொடரின் சூப்பர் 4 சுற்றின் முதலாவது போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.
இலங்கை அணி மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின இப்போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
> துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில்,
– தசுன் சானக்க ஆட்டமிழக்காது 64 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
– குசல் மெண்டிஸ் 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
> பங்களாதேஷ் அணி சார்பில் பந்துவீச்சில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்நிலையில் 169 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்று வெற்றி அடைந்தது.
> பங்களாதேஷ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில்,
– சயிப் ஹசன் 61 ஓட்டங்களை பெற்றார்.
– டோஹித் ஹிரிடோய் Towhid Hridoy 58 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை சார்பில் பந்துவீச்சில் தசுன் சானக்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
மேலும், சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியிலே பங்களாதேஷ் அணி தங்களது முதல் வெற்றியை பதிவுச் செய்து முன்னிலை வகிக்கின்றது.




