2026 September 14, Monday 🌧️ கொழும்பு 29° 🌧️ யாழ்ப்பாணம் 33° 🌧️ கண்டி 30° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
உலக தடகளத்தில் இலங்கைக்கு பொன்னான தருணம்!செப்டம்பர் 13 நாட்களில் 2,146 டெங்கு நோயாளர்கள்!வறட்சியால் யாலாவின் 1, 2 மண்டலங்கள் மூடப்பட்டன!மத்திய கிழக்கு பதற்றம்; எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்றம்!5 மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!22ஆவது திருத்தத்தை தோற்கடிக்க மக்கள் சக்தி திரட்டும் சஜித்!36 பிரதேச செயலகப் பிரிவுகள் வறட்சியின் பிடியில்!இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை 15 இலட்சத்தை கடந்தது!

உலக தடகளத்தில் இலங்கைக்கு பொன்னான தருணம்!

விளையாட்டுSeptember 14, 2026 · 45 seconds முன்0
உலக தடகளத்தில் இலங்கைக்கு பொன்னான தருணம்!

உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப்’ (World Athletics Ultimate Championship) தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். 

உலகச் சிறந்த தடகள வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டி ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் இன்று (13) நடைபெற்றது. 

இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 9.40 மணிக்கு ஆரம்பமானது. 

உலகின் முதன்மை ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க இந்தப் போட்டியில் 91.09 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்தார். 

அவர் இந்த ஆண்டில் 92.62 மீற்றர் தூரம் எறிந்து உலகச் சாதனையை நிலை நாட்டியிருந்தார். 

சமீபத்தில் ‘டைமண்ட் லீக்’ ஈட்டி எறிதல் சாம்பியன் பட்டத்தை வென்ற ருமேஷிற்கு, ஜெர்மனியின் ஜூலியன் வெபர் முக்கிய சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 

அவர் ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப்பில் 90.4 மீற்றர் தூரம் எறிந்து புதிய போட்டிச் சாதனையைப் படைத்திருந்தார். 

எவ்வாறாயினும் இன்றைய போட்டியில் ஜூலியன் வெபர் 85.89 மீட்டர் தூரம் எறிந்திருந்து மூன்றாம் இடத்தை கைப்பற்றியிருந்தார். 

இவர்களைத் தவிர, ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 81.49 மீட்டர் தூரம் எறிந்திருந்தார். 

உலகத் தரவரிசையில் முன்னிலையில் உள்ளவர்கள், ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் மற்றும் டயமண்ட் லீக் போன்ற தொடர்களில் வெற்றி பெற்ற சிறந்த வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும் இத்தொடர் கடந்த 11 ஆம் திகதி தொடங்கியதுடன், இன்று இறுதிப்போட்டி இடம்பெற்றிருந்தது. 

இத்தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெறும் வீரர் அல்லது வீராங்கனைக்கு 150,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படும். 

மேலும், 2 ஆம் இடம் முதல் 8 ஆம் இடம் வரை பெறும் வீரர்களுக்கும் பணப்பரிசுகள் வழங்கப்படுவதுடன், 8 ஆம் இடம் பெறும் வீரருக்கு 10,000 அமெரிக்க டொலர்கள் பரிசாகக் கிடைக்கவுள்ளது.