2026 November 6, Friday ⛅ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

செப்டம்பர் 13 நாட்களில் 2,146 டெங்கு நோயாளர்கள்!

உள்ளூர்September 14, 2026 · 2 months முன்4
செப்டம்பர் 13 நாட்களில் 2,146 டெங்கு நோயாளர்கள்!

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 97,637 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 

அதேநேரம் டெங்கு நோய் காரணமாக 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

இதனிடையே, செப்டம்பர் மாதத்தின் கடந்த 13 நாட்களில் 2,146 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

மொத்த டெங்கு நோயாளர்களின் பதிவைக் கருத்திற்கொள்ளும்போது, அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கையானது 20,742 ஆகும். 

இது தவிர, கொழும்பு மாவட்டத்தில் 19,235 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 7,291 நோயாளர்களும் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் 6,247 நோயாளர்களும் அதிகமாக பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.