இங்கிலாந்தின் ஆதிக்கம் தொடர்கிறது – பாகிஸ்தான் 268 ஓட்டங்கள் பின்னிலை!

சுற்றுலா பாகிஸ்தானிய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
இந்தநிலையில் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவின்போது, பாகிஸ்தானிய அணி தமது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்களை இழந்து 52 ஓட்டங்களை பெற்றிருந்தது.
முன்னதாக அந்த அணி, தமது முதல் இன்னிங்ஸில் 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 453 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்படி தற்போது பாகிஸ்தானிய அணி, இங்கிலாந்து அணியைக்காட்டிலும் 268 ஓட்டங்களால் பின்னிலையில் உள்ளது.
ஏற்கனவே இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்றுள்ள இந்த தொடரின் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி 2க்கு பூச்சியம் என்ற நிலையில் முன்னிலை வகிப்பதுடன், தொடரையும் வென்றுள்ளது.




