2026 September 11, Friday 🌧️ கொழும்பு 31° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 30° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
2027 முதல் சிம் பயனாளர்கள் முழு அடையாள சரிபார்ப்பு!பம்பலப்பிட்டி ரயில் நிலையம் புதுப்பொலிவில்!மிக் போர் விமான கொடுக்கல்வாங்கல் – கோட்டாபயவிடம் வாக்குமூலம்இங்கிலாந்தின் ஆதிக்கம் தொடர்கிறது – பாகிஸ்தான் 268 ஓட்டங்கள் பின்னிலை!போர் பதற்றம் தீவிரம் – கச்சா எண்ணெய் விலை 108 டொலரை கடந்தது!தெஹிவளையில் வீட்டை இலக்கு வைத்து கைக்குண்டுத் தாக்குதல் – இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பல பகுதிகளில் மழை – கடற்பகுதிகளில் பலத்த காற்றுடன் கொந்தளிப்பு எச்சரிக்கை!உயர்மட்ட சந்திப்புகளுக்குப் பின் ராஜ்நாத் சிங் புறப்பட்டார்!

மிக் போர் விமான கொடுக்கல்வாங்கல் – கோட்டாபயவிடம் வாக்குமூலம்

உள்ளூர்September 11, 2026 · 1 hour முன்3
மிக் போர் விமான கொடுக்கல்வாங்கல் – கோட்டாபயவிடம் வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார். 

மிக் போர் ரக விமானக் கொள்முதல் கொடுக்கல்வாங்கல் தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவருக்கு அந்த பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று முற்பகல் 9.10 மணியளவில் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஆஜராகியுள்ளார். 

இதேவேளை, மிக் போர் விமான கொடுக்கல்வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க நேற்று முற்பகல் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.