2026 September 9, Wednesday 🌧️ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° ☀️ கண்டி 30° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
இலங்கையுடன் 3 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட ராஜ்நாத் சிங்!செம்மைப்படுத்தப்பட்ட வீடியோவை பகிர்ந்த ட்ரம்ப்!பாகிஸ்தானின் மிகக் குறைந்த T20 ஓட்ட எண்ணிக்கை!ஜனாதிபதி செயலகத்தில் ராஜ்நாத் சிங் சந்திப்பு!இலங்கையின் சுகாதார சாதனைக்கு சர்வதேச அங்கீகாரம்!நீர்கொழும்பு சிறை மோதல்: இந்தியப் பிரஜையின் உடல் அடக்கம்!வெள்ள பாதிப்புக்குப் பின் நேபாளத்தில் நிலநடுக்கம்!டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ கைது!

பாகிஸ்தானின் மிகக் குறைந்த T20 ஓட்ட எண்ணிக்கை!

விளையாட்டுSeptember 9, 2026 · 2 hours முன்3
பாகிஸ்தானின் மிகக் குறைந்த T20 ஓட்ட எண்ணிக்கை!

துபாயில் நடைபெற்ற மகளிர் 20க்கு20ஆசியக் கிண்ணத் தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

எனினும் இந்திய பந்துவீச்சாளர்களின் சுழல் பந்துவீச்சில், பாகிஸ்தான் மகளிர் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர்.

இறுதியில் 18.1 ஓவர்களில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

மகளிர் 20க்கு 20 சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

இதற்கு முன்னர் 2012-ஆம் ஆண்டு ஆசியக் கிண்ணத்தில் இந்தியாவுக்கு எதிராக 63 ஓட்டங்களை எடுத்ததே அவர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கையாக இருந்தது.

இந்தநிலையில் தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இந்திய மகளிர் அணி, 8.4 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 57 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.