2026 September 9, Wednesday 🌧️ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° ☀️ கண்டி 30° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
இலங்கையுடன் 3 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட ராஜ்நாத் சிங்!செம்மைப்படுத்தப்பட்ட வீடியோவை பகிர்ந்த ட்ரம்ப்!பாகிஸ்தானின் மிகக் குறைந்த T20 ஓட்ட எண்ணிக்கை!ஜனாதிபதி செயலகத்தில் ராஜ்நாத் சிங் சந்திப்பு!இலங்கையின் சுகாதார சாதனைக்கு சர்வதேச அங்கீகாரம்!நீர்கொழும்பு சிறை மோதல்: இந்தியப் பிரஜையின் உடல் அடக்கம்!வெள்ள பாதிப்புக்குப் பின் நேபாளத்தில் நிலநடுக்கம்!டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ கைது!

ஜனாதிபதி செயலகத்தில் ராஜ்நாத் சிங் சந்திப்பு!

உள்ளூர்September 9, 2026 · 1 hour முன்4
ஜனாதிபதி செயலகத்தில் ராஜ்நாத் சிங் சந்திப்பு!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (09) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த (ஓய்வு) உள்ளிட்ட பலரையும் சந்திக்கவுள்ளார்.

கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட இந்திய – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்துவது குறித்தும் இந்த விஜயத்தின் போது மீளாய்வு செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வது ஒரு சிறப்பு அம்சமாகும்.