2026 October 23, Friday 🌧️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இலங்கையை வீழ்த்திய சிம்பாப்வே.

விளையாட்டுSeptember 7, 2025 · 1 year முன்2
இலங்கையை வீழ்த்திய  சிம்பாப்வே.

இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2வது T20 போட்டி நேற்று இடம்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதற்கமைய முதலாவதாக துடுப்பாடிய இலங்கை அணி 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 80 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் கமில் மிசார மாத்திரம் 20 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

அதற்கமைய 81 ஓட்டங்கள் வெற்றியிலக்காக கொண்டு துடுப்பாடிய சிம்பாப்வே அணி 14.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இதன்படி தொடரின் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று 1 – 1 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளது.