2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

துப்பாக்கிச் சூடு கலாசாரத்தை முறியடிக்க வேண்டும்.

உள்ளூர்September 6, 2025 · 11 months முன்0
துப்பாக்கிச் சூடு கலாசாரத்தை முறியடிக்க வேண்டும்.

நாடு முழுதும் துப்பாக்கிச் சூடு மற்றும் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொலை செய்யும் கலாச்சாரம் தொடர்ந்தும் வியாபித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், மக்கள், ஊடகத் துறையில் உள்ளவர்கள் மற்றும் சமூக ஊடக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (6) தெரிவித்துள்ளார்.

– அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய ஆளும் தரப்பினர் கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது மேசைகள் மற்றும் நாற்காலிகளைக் கொண்டு வாருங்கள், தேசிய பாதுகாப்பு குறித்த மேலதிக வகுப்புகளை எடுக்கிறோம் என தெரிவித்திருந்தனர்.

தேர்தல் காலங்களில் சொன்ன இந்த அரசியல் கட்சி நாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் இந்தக் கொலைக் கலாச்சாரம், நகரம் நகரமாக வியாபித்து வருகின்றன.

சமூகத்தை அச்சுறுத்தி வரும் இந்தக் கொலைக் கலாச்சாரத்தை முறியடிக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.