2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 32° 🌧️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இலங்கை அணியை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி!

விளையாட்டுJune 12, 2026 · 4 months முன்3
இலங்கை அணியை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி!

ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் நடைபெற்ற இலங்கை அணி மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

 இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

 இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

 துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக கமிந்து மெந்திஸ் 51 ஓட்டங்களை பெற்றார்.

 பந்து வீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் ஜேசன் ஹோல்டர் மற்றும் ஷமர் ஜோசப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 இதற்கமைய, 148 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 19.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ஓட்டங்களை பெற்று, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 துடுப்பாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 65 ஓட்டங்களை பெற்றார்.

 பந்து வீச்சில் இலங்கை  அணி சார்பில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும், மற்றும் ஈஷான் மலிங்க 1 விக்கெட்டையும் விக்கெட்டுகளை கைப்பற்றினர்.