2026 October 11, Sunday ⛅ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

FIFA உலகக்கிண்ணம் 2026: தென் கொரியா திரில் வெற்றி!

விளையாட்டுJune 12, 2026 · 4 months முன்5
FIFA உலகக்கிண்ணம் 2026: தென் கொரியா திரில் வெற்றி!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் பிரமாண்டமாகத் தொடங்கியுள்ள 2026 பிஃபா  உலகக்கிண்ணக் காற்பந்துத் தொடரின் குழு ‘ஏ’  க்கான இரண்டாவது லீக் போட்டியில், செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தென் கொரியா அணி திரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

 இப்போட்டியானது மெக்சிகோவின் குவாடலஜாரா மைதானத்தில் (Guadalajara Stadium) நடைபெற்றது.

 போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. எனினும், இரு அணிகளின் பலத்த பாதுகாப்பு அரண்களைத் தாண்டி முதல் பாதியில் எவராலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் 0-0 என கோல் ஏதுமின்றி சமநிலையில் நிறைவடைந்தது.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும் போட்டியின் விறுவிறுப்பு அதிகரித்தது. ஆட்டத்தின் 59ஆவது நிமிடத்தில் செக் குடியரசு அணியின் Ladislav Krejčí ஒரு அபாரமான கோலை அடித்துத் தனது அணியை 1-0 என முன்னிலைப்படுத்தினார்.

 ஒரு கோல் பின்னடைவில் இருந்த தென் கொரிய அணி, அதன் பின்னர் ஆட்டத்தை முழுமையாகத் தன்வசப்படுத்தியது. அதற்கமைய, போட்டியின் 67ஆவது நிமிடத்தில் தென் கொரியாவின்  Hwang In-beom கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்குக் கொண்டு வந்தார்.

அதைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 80ஆவது நிமிடத்தில் தென் கொரியாவுக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய  Oh Hyeon-gyu மீண்டும் ஒரு துல்லியமான கோலை அடித்து அணியை 2-1 என முன்னிலை பெறச் செய்தார்.