2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

போரைத் தவிர்க்க அமெரிக்கா எடுக்கும் அதிரடி நடவடிக்கை!

உலகம்May 20, 2026 · 3 months முன்0

ஈரான் மீதான இராணுவ நடவடிக்கையை நிறுத்துவதற்கான தீர்மானம் ஒன்றை அமெரிக்க செனட் சபை நிறைவேற்றியுள்ளது.

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நாடாளுமன்றத்தின் (Congress) வெளிப்படையான அனுமதியைப் பெறாமல் ஈரான் மீது எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்பதை இந்த தீர்மானம் உறுதிப்படுத்துகிறது.

குடியரசுக் கட்சித் தலைவரான ட்ரம்ப்பின் நிர்வாக அதிகாரத்திற்குச் சவால் விடும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

செனட் சபையில் குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்குகள் பதிவாகியுள்ளது இதுவே முதல் முறையாகும்.

இந்த தீர்மானம் நடைமுறைக்கு வர வேண்டுமானால், அமெரிக்க பிரதிநிதிகள் சபையிலும் (House) இது பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற வேண்டும்.

பிரதிநிதிகள் சபையில் இந்த தீர்மானம் நிறைவேறினாலும், ட்ரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இதற்கு ‘வீட்டோ’ (Veto – மறுப்புத் தெரிவித்தல்) அதிகாரத்தைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதால், இது சட்டமாவதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது.

ட்ரம்ப்பின் தன்னிச்சையான இராணுவ முடிவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனநாயகக் கட்சியினரும், சில குடியரசுக் கட்சியினரும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.