2026 October 10, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நாடு முழுவதும் ஓகஸ்ட் வரை தட்டுப்பாடின்றி எரிபொருள்!

உள்ளூர்May 20, 2026 · 5 months முன்6
நாடு முழுவதும் ஓகஸ்ட் வரை தட்டுப்பாடின்றி எரிபொருள்!

நாட்டில் ஓகஸ்ட் மாதம் வரை போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவிக்கையில்,

நவம்பர் மாதம் வரை தேவையான எரிபொருள் கொள்வனவுகளுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதற்கமைய, அமெரிக்காவிலிருந்து 90,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் ஒன்று இம்மாதம் 28 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது.

அத்துடன், மற்றொரு மசகு எண்ணெய் கப்பல் இம்மாதம் 31 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தற்போது நாட்டில் எரிபொருள் நுகர்வு குறைந்துள்ளதாகவும் மயூர நெத்திகுமாரகே இதன்போது சுட்டிக்காட்டினார்.