2026 October 10, Saturday 🌧️ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 32° 🌧️ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இலங்கை வந்தடைந்தது ஹரியானா 14 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணி!

விளையாட்டுMay 18, 2026 · 5 months முன்1
இலங்கை வந்தடைந்தது ஹரியானா 14 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணி!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 14 வயதுக்குட்பட்டோருக்கான நட்புமுறை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக, இந்தியாவின் ஹரியானா மாநில இளையோர் அணி இலங்கை வந்தடைந்துள்ளது.

17 வீரர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய இந்த இளையோர் அணி, நேற்று மாலை 04:00 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக நாட்டை வந்தடைந்தது. இவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளனர். அத்துடன் ஒரு தீவிர பயிற்சி அமர்விலும் இந்த அணி பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இரு நாட்டு இளம் வீரர்களின் திறமைகளை வெளிக்கொணர இந்த நட்புமுறை தொடர் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான “ஃபெலிகான்” நிறுவனம் இந்த கிரிக்கெட் தொடருக்கு முழுமையான நிதியுதவி (Sponsorship) வழங்கி ஆதரவளித்துள்ளது. மேலும், இலங்கையின் விளையாட்டுத் தேவையைக் பூர்த்தி செய்யும் நோக்கில், தனது 19-வது சர்வதேச விற்பனை மையத்தை (Outlet) இலங்கையில் திறப்பதற்கும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.