2026 November 4, Wednesday ☀️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

2026 டி-20 உலகக் கிண்ணம் – அயர்லாந்துடன் மோதுகிறது இலங்கை!

விளையாட்டுFebruary 8, 2026 · 9 months முன்6
2026 டி-20 உலகக் கிண்ணம் – அயர்லாந்துடன் மோதுகிறது இலங்கை!

இலங்கை மற்றும் இந்தியாவின் இணை அனுசரணையில் நடைபெறும் 2026 ஐசிசி இருபதுக்கு 20 (டி-20) உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில், இலங்கை அணி எதிர்கொள்ளும் முதலாவது போட்டி அயர்லாந்துக்கு எதிராக இன்று (08) ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டின் வேகமான மற்றும் விறுவிறுப்பான ஆட்டமுறையாகக் கருதப்படும் 20-20 வடிவிலான உலகக் கிண்ணத் தொடரின் 10ஆவது பதிப்பு இதுவாகும்.

இந்தத் தொடரின் பெரும்பாலான போட்டிகள் இந்தியாவின் சென்னை, கொல்கத்தா, டெல்லி, அகமதாபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன. இலங்கையில் நடைபெறவுள்ள போட்டிகள் கொழும்பு மற்றும் பல்லேகலை ஆகிய இடங்களிலுள்ள 3 மைதானங்களில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இறுதிப் போட்டி உட்பட இத்தொடர் மொத்தம் 55 போட்டிகளைக் கொண்டதுடன், அவற்றில் 20 போட்டிகளை இலங்கையில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், பாகிஸ்தான் அணி அரை இறுதி அல்லது இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால், இலங்கையில் நடைபெறும் போட்டிகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரிக்கும்.

20 அணிகள் பங்கேற்கும் இம்முறை தொடரில், இலங்கை அணி ‘B’ பிரிவில் போட்டியிடுகிறது. இப்பிரிவில் அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமான் மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.