2026 November 4, Wednesday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

அரசியல் பயணத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 6 ஆண்டுகள் பூர்த்தி

உள்ளூர்February 8, 2026 · 9 months முன்6
அரசியல் பயணத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு  6 ஆண்டுகள்  பூர்த்தி

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சி ஸ்தாபிக்கப்பட்டு ஆறு வருடங்கள் பூர்த்தியடைவதனை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கும் கட்சிக்கும் ஆசி வேண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க புனித கதிர்காமம் கிரிவெஹெர விகாரை வளாகத்தில் பெப்ரவரி 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் பல்வேறு விசேட சமய நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வுகளில், மஹாசென் தேவாலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து அஷ்டபலபோதியவில் விசேட சமய அனுஷ்டானங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் புனித அரச மரத்திற்கு ‘அட்டபிரிகரை’ வழங்கி வைக்கப்பட்டது.

சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து, கிரிவெஹெர தூபிக்கான விசேட வஸ்திர (கப்ருக்க ) பூஜை இடம்பெற்றது. பின்னர், சர்வராத்திரியப் பிரித் பாராயணம் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து மகா சங்கத்தினருக்குப் பிரிகர மற்றும் காலை நேரத் தானம் வழங்கி வைக்கப்பட்டு ஆசிகள் பெறப்பட்டன.