2026 October 12, Monday ⛅ கொழும்பு 23° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நீர்கொழும்பு சிறையில் மீண்டும் வன்முறை! உயிரிழப்பு 5 ஆக உயர்வு

உள்ளூர்July 6, 2026 · 3 months முன்5
நீர்கொழும்பு சிறையில் மீண்டும் வன்முறை! உயிரிழப்பு 5 ஆக உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் கைதிகளுக்கிடையே வெடித்த மோதல், இன்று (06) மீண்டும் தீவிரமடைந்ததையடுத்து அங்கு மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. 

 

நேற்றைய மோதலில் இருவர் உயிரிழந்த நிலையில், இன்று ஏற்பட்ட தொடர் மோதல்களில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர். 

 

உயிரிழந்தவர்களில் இருவர் சிறைச்சாலை அதிகாரிகள் என தெரிவிக்கப்படுகிறது.

 

இதன்படி, இந்த வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

 

நேற்று மதியம் 1 மணியளவில் விளக்கமறியல் கைதிகள் குழுவிற்கும், தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த வன்முறைக்கு முதற்காரணமாக அமைந்தது. 

 

நேற்றைய மோதலில் 38 பேர் காயமடைந்திருந்த நிலையில், இன்று காலை மீண்டும் மோதல் மூண்டதால் மேலதிகமாக 25 கைதிகள் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 

நேற்று மாலை அதிகாரிகளால் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த சிறைச்சாலையின் சூழல், இன்று மீண்டும் சீர்குலைந்தது. நிலைமையை உடனடியாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக, சிறைச்சாலை வளாகத்தில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். 

 

தற்போது சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு வன்முறையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.