2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம் – காவல்துறை விசேட அதிரடிப்படையினர் வரவழைப்பு

உள்ளூர்July 6, 2026 · 1 month முன்1


நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இரு பிரிவினருக்கு இடையே நேற்று (05) மதியம் 1 மணியளவில் மோதல் ஒன்று ஏற்பட்டிருந்தது.

 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும், தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும் இடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

 

இம்மோதலில் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 38 பேர் காயமடைந்து தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இன்று (06) காலை நிலவரப்படி சிறைச்சாலையின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும், தற்போது அங்கு மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.